திருக்குறள்

1289.

மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார்.

திருக்குறள் 1289

மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார்.

பொருள்:

காதல் இன்பம், மலரைவிட மென்மையானது அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.

மு.வரததாசனார் உரை:

காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

சாலமன் பாப்பையா உரை:

காதல் இன்பம் மலரைவிட மென்மையானது. அதை அறிந்து அனுபவிப்பதற்கு ஏற்ற இடம், காலம், தேவையானவை எல்லாம் பெற்றுக் காதல் இன்பத்தின் நலனை அனுபவிப்பவர் இவ்வுலகில் சிலரே.